×
Saravana Stores

நீதிமன்றத்தில் ஆஜராகாதவருக்கு பிடிவாரன்ட்

 

திண்டுக்கல், அக்.23: திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் அருகே உள்ள குரும்பபட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2017ல் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில் மாரிமுத்து, பெருமாள் மற்றும் அவரது மனைவியை கத்தியால் குத்தினார். இதில் இருவரும் காயமடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிந்த பழநி தாலுகா போலீசார், மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சரண் நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கினாார். அதில் மாரிமுத்துவுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். குற்றவாளி மாரிமுத்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

The post நீதிமன்றத்தில் ஆஜராகாதவருக்கு பிடிவாரன்ட் appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Marimuthu ,Kurumbapatti Mariamman Koil Street ,Palani Balasamuthram ,Dindigul district ,Perumal ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள...