மும்பை: மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 288 தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. அதேபோல் ஜார்க்கண்டில் 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் மொத்தம் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் நேற்று முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய அக்டோபர் 29ம் தேதி கடைசி நாளாகும்.
வரும் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதே போல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்கட்டமாக 43 தொகுதிகளில் நவ. 13ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் 38 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.
The post மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: அக்.29ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.