நெல்லை, அக். 23: நெல்லை அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை(57), வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பணியாற்றி வந்தார். கல்லூரியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வல்லநாட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கிள்ளிகுளம் குடியிருப்புக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வரும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து முறப்பநாடு போலீசார் சென்று உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
The post வாகனம் மோதி வேளாண் கல்லூரி ஊழியர் பலி appeared first on Dinakaran.