- Tamiraparani
- மார்த்தாண்டம்
- குளித்துரா சப்பாத் சாலை
- கன்னியாகுமரி மாவட்டம்
- தமிராபராணி நதி
- குலத்துரை
- குளித்துரா சப்பாத்
- தின மலர்
மார்த்தாண்டம் அக். 23: தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்ததால் குழித்துறை சப்பாத்து சாலை திறக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆறு நிரம்பிப் பாய்ந்தது. கடந்த இரண்டு மாதமாக குழித்துறை சப்பாத்து மேல் பகுதி வழியாக சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்தது. இதனால் பைக்கில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சப்பாத் இருபுறமும் கம்பி போட்டு குறுக்கு சாலை மூடப்பட்டது. நடந்து செல்ல வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் இரண்டு மாதத்திற்கு பிறகு மழை குறைந்தது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்தது. சப்பாத்து கீழ்ப்பகுதி உள்ள மடை வழியாக தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. மேல் பகுதியில் தண்ணீர் பாயாததால் சப்பாத்து குறுக்கு சாலை இரண்டு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்டது. இதனால் நேற்று முதல் பைக் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
The post தாமிரபரணியில் தண்ணீர் குறைந்தது குழித்துறை சப்பாத்து சாலை திறப்பு appeared first on Dinakaran.