×

சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஒன்றியக் குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா கான் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ஏ.ஆர்.வெற்றிவேல் முன்னிலை வகித்தார். வெள்ளியூர் கால்நடை உதவி மருத்துவர் இ.பொற்கொடி தலைமையில் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து கன்றுகளுக்கு பேரணி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கால்நடைகளை சிறப்பாக பராமரித்த 3 மூத்த விவசாயிகளையும் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், கால்நடை ஆய்வாளர்கள் பி.பாபு, மோகன், உதவியாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் என்.சுந்தரம், வார்டு உறுப்பினர்கள் குமரேசன், ஜெகதீசன், சங்கீதா, ஜெயந்தி, ஓசன்னா, திமுக நிர்வாகிகள் வி.கே.கண்ணையா, நாகராஜ், கே.ஆர்.முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியம் பாரிவாக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. . இதில் பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Veterinary Awareness Camp ,Thiruvallur ,Tamil Nadu Government ,Tamil Nadu Government Animal Care Department ,Arumbakam Uradi ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்