- ரேஷன் கடை ஊழியர்கள்
- திருச்சி
- தமிழ்நாடு அரசு நியாயமான விலை கடை ஊழியர் சங்கம்
- சங்
- மாநில தலைவர்
- ஜெயச்சந்திர ராஜா
- மாநில துணைத் தலைவர்…
- ரேஷன் கடை
- யூனியன்
- தின மலர்
திருச்சி, அக்.23: தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பிச்சை பிள்ளை, மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ரமேஷ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சக்திவேல், சூசை, சிவசங்கு, தொட்டியம் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வெளிநபர் வைத்து கட்டுப்பாட்டற்ற பொருட்களை இறக்குவதை தவிர்க்கப்பட வேண்டும். அதற்கான 10 சதவீத கமிஷன் தொகையை பெறுவதை தடுக்கப்பட வேண்டும். நியாய விலை கடைகளுக்கு கடை வாடகையை பணியாளரிடம் வசூல் செய்வதை தடுக்கப்பட வேண்டும். நியாய விலை கடைகளுக்கு கட்டுப்பாடற்ற பொருட்களை இறக்குவதற்கு பதிவாளர் சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
The post பணியாளரிடம் வாடகை வசூலிப்பு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.