×
Saravana Stores

அரியலூர் மாவட்டத்தில் 25,000 பணம் விதை நடவு செய்யும் பணி

தா.பழூர், அக். 23: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட சித்தேரி கரையோரம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பனை மேலாண்மை இயக்கம் 2024 – 25 திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடவு செய்யும் பணி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். பனைமரம் மாநிலத்தின் பாரம்பரிய மரமாக கருதப்படுகிறது, மேலும், பனைமரம் உயரமாக வளரக்கூடியது. பனைமரத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகள் பல இவற்றின் மூலம் மனிதன் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு தீர்வாகவும் இது இருந்து வருகிறது. பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனங்கிழங்கு அதிக நார் சத்துக்களை கொண்டுள்ளது. பதநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்க கூடியதாக திகழ்கிறது.

பனை ஓலையை கொண்டு பல்வேறு விதமான கைவினைப் பொருட்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தமிழக மக்களின் வாழ்வியலோடு தொடர்பு கொண்டதாக திகழும் பனை மரங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தா.பழூர் ஒன்றியத்தில் 4250 பனை விதைகள் நடவு செய்ய உள்ளது.சோழமாதேவி கிராமத்தில் உள்ள சித்தேரி கரையோரம் குறிப்பிட்ட இடைவெளியில் பனை விதை நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பாலமுருகன், தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) கனிமொழி, தா.பழூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜீவா, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சோழமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் மாவட்டத்தில் 25,000 பணம் விதை நடவு செய்யும் பணி appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Tha. Pahur ,Palm Management Movement 2024-25 ,Chitheri Coastal Horticulture and ,Hill Crops Department ,Cholamadevi Panchayat ,Tha.Pazur, Ariyalur District ,
× RELATED உடையார்பாளையம் பேரூராட்சியில் போதை...