×

வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியதால் ஆபாச படம் வெளியிடுவதாக சித்தி, தங்கைக்கு மிரட்டல்: வாலிபர் கைது

பெரம்பூர்: பெரம்பூர் கோவிந்தசுவாமி தெருவை சேர்ந்தவர் ரம்யா (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கல்லூரியில் பயிலும் ஒரு மகள் உள்ளார். ரம்யாவின் அக்கா மகனான காசிமேடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஆண்டனி (25), கடந்த 3 மாதங்களாக ரம்யா வீட்டில் தங்கி வந்துள்ளார். இரவு நேரங்களில் அவர் குடித்து விட்டு வந்ததால், அவரை இனிமேல் தனது வீட்டிற்கு வரவேண்டாம் என ரம்யா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் ஆண்டனி, ‘‘உங்களது அந்தரங்க படங்கள் எனது செல்போனில் உள்ளன.

அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்,’’ என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ஆகாஷ் ஆண்டனியை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அவ்வாறு எந்த படங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் ரம்யா மற்றும் அவரது மகளுக்கு மிரட்டல் விடுத்ததால் அவரை சிறையில் அடைத்தனர்.

The post வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியதால் ஆபாச படம் வெளியிடுவதாக சித்தி, தங்கைக்கு மிரட்டல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perampur ,Ramya ,Govindaswamy Street ,Aakash Antani ,Aka ,Kasimedu ,Siddhi ,
× RELATED மது அருந்த பணம் கேட்ட விவகாரத்தில்...