- அதானி
- ஓரியண்ட் சிமெண்ட் கம்பன
- புது தில்லி
- அதானி குழு
- அம்புஜா சிமெண்ட்ஸ்
- ஏசிசி சிமென்ட்
- ஓரியண்ட் சிமெண்ட்
- தின மலர்
புதுடெல்லி: அதானி குழுமம் தற்போது ரூ.8,100 கோடிக்கு ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. சிமெண்ட் துறையிலும் அடி எடுத்து வைத்துள்ள அதானி குழுமம் ஏற்கனவே அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி சிமெண்ட் ஆகியவற்றை கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது ஓரியண்ட் சிமெண்ட்சை வாங்க உள்ளது. சி.கே.பிர்லா குழுமத்தை சேர்ந்த ஓரியண்ட் சிமெண்ட்சை ரூ.8,100 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அதானி குழுமம் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி ஓரியண்ட் சிமெண்ட் லிமிடெட்டின் மொத்த பங்கு மதிப்பீட்டில் 46.8 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.
மேலும் கூடுதலாக 26 சதவீத பங்குகளை வாங்க ஓப்பன் ஆபரையும் அதானி குழுமம் அறிவித்துள்ளது. இந்த ஓப்பன் ஆபரில் ஒரு பங்கை ரூ.395.40 விலைக்கு வாங்க உள்ளதாகவும், இதற்கான பணிகள் 4 மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. ஓரியண்ட் சிமெண்ட்சை கையகப்படுத்துவதன் மூலம் 25ம் நிதியாண்டின் இறுதிக்குள் அதானி சிமெண்ட்ஸ் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன் என்ற இலக்கை அடையும், நாட்டின் ஒட்டு மொத்த சந்தை பங்கில் 2 சதவீத லாபம் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
The post ரூ.8,100 கோடிக்கு ஓரியண்ட் சிமெண்ட் நிறுவனத்தை கைப்பற்றிய அதானி appeared first on Dinakaran.