×

ரூ.3,000 லஞ்சம் ஆவின் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

கோவை:  கோவை ஆவின் நிர்வாகத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் துணை மேலாளராக பணியாற்றியவர் தங்கவேலு (63). ராமநாதபுரம் பகுதியில் ஆவின் பால் பூத் ஏஜன்டாக இருந்த உதயகுமார், அங்கு வேறு பொருட்கள் விற்றதை  விஜிலன்ஸ் கமிட்டி கண்டறிந்தது. இதுபற்றி உதயகுமாரை அழைத்து தங்கவேலு பேசினார்.  அப்போது உங்கள் மீது அளிக்கப்பட்ட புகார், குற்றச்சாட்டை நிவர்த்தி செய்து தருவதாக கூறி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். உதயகுமார் ரூ.3 ஆயிரம் தர ஒப்புக்கொண்டுவிட்டு, இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் அறிவுரைபடி கடந்த 2013 ஆகஸ்ட் 5ம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் தங்கவேலுவிடம் ரூ.3 ஆயிரத்தை உதயகுமார் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் விசாரித்து தங்கவேலுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்….

The post ரூ.3,000 லஞ்சம் ஆவின் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Thangavelu ,Aavin ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED கோவை காரமடையில் கடும் பனிப்பொழிவு: ஜாதி முல்லை பூச்செடிகள் கருகின