×

சார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் ரூ.1.10 கோடி தங்கத்துடன் 2 பேர் கைது

பீளமேடு:  சார்ஜாவிலிருந்து கோவைக்கு நேற்று முன்தினம் அதிகாலை ஏர் அரேபியா விமானம் வந்தது. மத்திய வருவாய் பலனாய்வு பிரிவினர், ரகசிய தகவலின்பேரில் அதில் வந்த 4  பயணிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் ஆசனவாயில் தங்க கட்டியை மறைத்து  கடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களிடமிருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 2.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த நசிருதீன் முகமது தம்பி மற்றும் கலீல் ரகுமான் முஸ்தபா ஆகிய 2 பேரை அதிகாரிகள்  கைது செய்தனர். …

The post சார்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் ரூ.1.10 கோடி தங்கத்துடன் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sharjah ,Beelamedu ,Air Arabia ,Coimbatore ,Central Revenue Intelligence Unit ,Dinakaran ,
× RELATED கோவையிலிருந்து சார்ஜா புறப்பட்ட...