×
Saravana Stores

நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாமக்கல்: ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பள்ளூர், புதன்சந்தை பகுதியில் காரில் இருந்து இறங்கி மக்களிடம் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

* கலைஞர் சிலை திறப்பு

நாமக்கல் பரமத்திரோட்டில், கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு 8 அடி உயரத்தில் வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானம் மூலம் இன்று காலை வந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் நாமக்கல்லுக்கு வந்து சேர்ந்தார். முதல்வர் வரும் வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கலைஞர் சிலையை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாமக்கல்லில் ரூ.664 கோடியில் புதிய திட்டங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நாமக்கல்-சேலம் ரோட்டில் உள்ள பொம்மகுட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமை வகிக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.366 கோடியில் 140 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.298 கோடியில் 134 நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.19.50 கோடியில் முதலைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் மாநகராட்சி டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம், ரூ.114 கோடியில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் அரசு சட்டக்கல்லூரி, விடுதி, பள்ளி கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ரூ.89 கோடியில் நாமக்கல் கால்நடை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைய உள்ள புதிய நவீன பால்பதன ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.52 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள், 96 கட்டிடப் பணிகள், இணைப்பு சாலைகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மதிவேந்தன், ராஜேந்திரன், எம்பிக்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

 

The post நாமக்கல் மாவட்டத்தில் ரூ.810 கோடியில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Namakkal district ,Namakkal ,M. K. Stalin ,Pudhanshanthi ,Pallur ,Dinakaran ,
× RELATED நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள்...