×

ராமேஸ்வரத்தில் 12 நாட்களாக நடந்த மீனவர் ஸ்டிரைக் வாபஸ்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 19ம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால் ரூ.3 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள், மீனவர் பிரதிநிதிகள் இடையே நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமை வகித்தார். எஸ்பி கார்த்திக், மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் உள்ளிட்ட அதிகாரிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் தேவதாஸ், சேசுராஜ், சகாயம், எமரிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்து வருவதாகவும், சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும், இலங்கை பிரச்னை குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மீனவர்கள் பேசுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்றுடன் 12வது நாளாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர். ஜன. 3ம் தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாகவும் தெரிவித்தனர்….

The post ராமேஸ்வரத்தில் 12 நாட்களாக நடந்த மீனவர் ஸ்டிரைக் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Fisherman Strike ,Rameswaram ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Fisherman Strike Vacation ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு