×

இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் கிளை காட்டம்

மதுரை: நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுவதாக மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். கர்நாடக மாநிலம் பிடதியைச் சேர்ந்த சுரேகா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தாவின் அறிவுறுத்தலின் பேரில் அபகரிக்க முயன்றதாக எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் அப்படி எந்த முயற்சியும் செய்யவில்லை. பொய்யான புகாரை கொடுத்து எங்கள் மீது வழக்கு செய்திருக்கிறார்கள். எனவே தனக்கு முன்ஜாமீன் வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது , நித்யானந்தாவின் சீடர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கும் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுவதாக கணேஷ் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அப்போது, சுரேகாவுக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என நித்யானந்தாவின் ஆதரவு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி; நித்தியானந்தா தலைமறைவாய் இருந்து கொண்டு நீதித்துறை அமைப்புக்கே சவால் விடுகிறார்.

நித்தியானந்தாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளது; ஆனால் நீதிமன்றத்திற்கு வருவதில்லை. முதலில் நித்தியானந்தாவை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்லுங்கள். நித்தியானந்தா சொத்துக்களை இந்தியன் ஜூடிசியல் பாதுகாக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நீதிபதி; இட விகாரத்தில் இனி தலையிட மாட்டேன் என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்தால் முன்ஜாமின் குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். உத்தரவாத பத்திரம் நாளை தாக்கல் செய்தால் முன்ஜாமின் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.

The post இந்திய நீதித்துறைக்கே சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் கிளை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Nithyananda ,iCourt ,Katham ,Madurai ,Madurai High Court ,Indian ,Nithiananda ,Sureka ,High Court ,Karnataka ,Icourt Branch Katham ,Dinakaran ,
× RELATED உரிமையியல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை : ஐகோர்ட் கிளை அதிரடி