- சென்னை மாநகர சபை
- நீலகொடி
- மெரினா கடற்கரை
- சென்னை
- சென்னை ஊராட்சி
- நீலகொடி கடற்கரை
- சென்னை நகராட்சியின் சிறப்புத் திட்ட நடை
- கோவலம் கடற்கரை
- தின மலர்
சென்னை: மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டம் தொடர்பாக டெண்டர் கோரியது சென்னை மாநகாரட்சி. நீலக்கொடி கடற்கரை திட்டம் செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை டெண்டர் வெளியிட்டது. கோவளம் கடற்கரைக்கு மட்டுமே நீலக் கொடி சான்றிதழ் உள்ள நிலையில் மெரினா கடற்கரைக்கும் பெற திட்டமிட்டுள்ளது. ரூ.5 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது.
தற்போது தமிழகத்தின் ஒரே நீலக்கொடி கடற்கரையாக கோவளம் கடற்கரை உள்ளது. இந்தச் சான்றிதழானது, தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் நிலைமை உள்ளிட்ட சர்வதேச தரங்களைச் பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு திட்டம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள மற்ற மூன்று கடற்கரைகள் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட கடற்கரைகளாக அறிவிக்கப்படுவதற்கு ஒரு படி நெருங்கிவிட்டன, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம் (NCSCM) விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) இதற்காக தயாரித்து உள்ளது. தமிழ்நாடு கடற்கரை மறுசீரமைப்பு இயக்கத்தின் சார்பில் உலக வங்கி கடனுதவியுடன் ரூ.1,675 கோடியில் கடலோர மேம்பாட்டு புதிய திட்டங்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு.
இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் அமைக்கப்படும் சில முக்கிய திட்டங்கள் உள்ளன. இதன் ஒரு கட்டமாக சென்னை மெரினா பீச்சை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
புதிய கடற்கரைகள்: சென்னை மற்றும் அதன் விரிவாக்கப்பட்ட பகுதிகள் என்று மொத்தம் 52 கிமீ கடற்கரையில் புதிதாக கடற்கரைகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்த பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்புடன் கூடிய 20 கடற்கரைகளைப் பெற வாய்ப்புள்ளது.
The post மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டம் தொடர்பாக டெண்டர் கோரியது சென்னை மாநகாரட்சி appeared first on Dinakaran.