2026 காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டு பிரிட்டனில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் உள்ளிட்ட போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு பதக்க வாய்ப்புள்ள விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளதால் விளையாட்டு ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஹாக்கி 1998-ல் அறிமுகமானதிலிருந்து ஒவ்வொரு காமன்வெல்த்போட்டியிலும் இடம்பெற்றுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (CGF) விளையாட்டுகளை நடத்துவதற்கான செலவைக் குறைக்கும் நடவடிக்கையை பரிசீலித்து வருகிறது. ஆஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா விலைவாசி உயர்வு காரணமாக காமன்வெல்த் போட்டிகளை நடத்த மறுத்து வெளியேறிய நிலையில், விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஸ்காட்லாந்து முன்வந்தது.
இந்த நிலையில் செலவினங்களை குறைக்க ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ் ஆகிய போட்டிகள் பட்டியலில் இடம்பெறவில்லை.
The post 2026 காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம் appeared first on Dinakaran.