×
Saravana Stores

தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: குழந்தை தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உணவகங்களுக்கு சென்று உணவு தொடர்பான பல்வேறு வீடியோக்களை வெளியிடும் பிரபல யூடியூபர் இர்ஃபான் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இர்பான் மனைவி கடந்த ஜூலை மாதம் குழந்தை பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அப்போது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டும் விடியோ ஒன்றையும் அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த விவகாரம் மருத்துவ துறையில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் நிகழ்ந்த தனியார் மருத்துவமனை இருக்கும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவத்துறையின் ஜாயின் டெரக்ட்டர் இளங்கோவன் புகார் அளித்தார். யூடியூபர் இர்பான் மீதும் இந்த நிகழ்விற்கு அனுமதி அளித்த மருத்துவர் நிவேதிதா மீதும் புகார் அளிக்கப்பட்டது. மேலும், ஆபரேசன் தியேட்டரில் அன்று பணியில் இருந்தவர்களின் விவரங்களை செம்மஞ்சேரி போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இர்பான் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பேசுகையில், தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது. தவறு செய்தவர்களை காப்பாற்ற திமுக எப்போதும் நினைக்காது. இர்பான் செய்தது மிகவும் தவறான செயல்.

இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார்

குழந்தை தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் இர்பான் மருத்துவ சட்ட விதிகளை மீறியுள்ளார். இர்பான் விவகாரத்தில் தனியார் மருத்துவமனை, மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடர தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது

தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

The post தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma ,Chennai ,Narendra Fadnavis ,Subramanian ,Irfan ,YouTuber ,Minister Ma Subramanian ,Dinakaran ,
× RELATED இர்ஃபான் மீது சட்டரீதியான நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்