×

முடிச்சூரில் ஆம்னி பஸ் பேருந்து நிலையம் விரைவில் திறந்து வைப்பு : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ரூ.15 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காலநிலை பூங்காவை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர் பாபு தகவல் அளித்துள்ளார். இதனுடன் சேர்ந்து முடிச்சூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பஸ் பேருந்து நிலையத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார். முடிச்சூரில் 150 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றும் சேகர்பாபு குறிப்பிட்டார்.

The post முடிச்சூரில் ஆம்னி பஸ் பேருந்து நிலையம் விரைவில் திறந்து வைப்பு : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Omni Bus Bus Stand ,Mudichur ,Minister ,Shekharbabu ,Chennai ,Shekhar Babu ,Chief Minister ,M.K.Stalin ,Klambakkam Bus Terminal ,omni bus ,bus station ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயலால் பெய்யும் கனமழை...