×

பிரபாஸ் ஜோடியாக நிதி அகர்வால்

ஐதராபாத்: தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ‘பூமி’, சிம்பு ஜோடியாக ‘ஈஸ்வரன்’, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘கலகத் தலைவன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தவர், நிதி அகர்வால். தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘ஹரிஹர வீரமல்லு’ படத்தில் நடிக்கிறார். தவிர, மாருதி இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி: இதுவரை கிளாமருடன் கூடிய கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வந்த நான், முதல்முறையாக பவன் கல்யாண் ஜோடியாக ‘ஹரிஹர வீரமல்லு’ என்ற தெலுங்கு படத்தில், மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறேன். எனது திரைப்பயணத்தில் இது மறக்க முடியாத படமாகவும், கேரக்டராகவும் இருக்கும்.

திரையில் தோன்றும்போது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி, நடிப்பிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஒரு படத்தில் நடித்த கேரக்டர் மாதிரி இன்னொரு படத்தில் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். சினிமாவில் இதுதான் நடிப்பு என்று வரையறுக்க முடியாது. தினமும் புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அனைத்தும் தெரிந்தவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. நடிப்பு தொடர்பாக மற்றவர்களின் படங்களைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். ஒரு படத்தின் நான் ஏற்றுக்கொண்ட கேரக்டரில், எனது முழுமையான திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக செயல்படுகிறேன். திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்க காத்திருக்கிறேன்.

The post பிரபாஸ் ஜோடியாக நிதி அகர்வால் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nithi Aggarwal ,Prabhas ,Hyderabad ,Jayam Ravi ,Simbu ,Udhayanidhi Stalin ,Pawan Kalyan ,Maruti ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சலார் டிரெய்லர் வெளியானது