திருச்சுழி, அக்.22: நரிக்குடி அருகே ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நரிக்குடி அருகே உள்ள நல்லுக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது சுள்ளங்குடி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்கள் சுள்ளங்குடியில் ரேஷன் கடை இல்லாததால் அருகில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள நல்லுக்குறிச்சி கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இவர்கள் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டுமென்றால் அப்பகுதியில் உள்ள பெரிய கண்மாயை கடந்துதான் நல்லுக்குறிச்சிக்கு செல்ல வேண்டும். மழைக்காலங்களில் கண்மாயை கடந்து பொருட்கள் வாங்க செல்வது சிரமமாக உள்ளது. தண்ணீரை கடந்து ரேஷன் பொருட்களை கொண்டு வரும் போது தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது.
தற்போது மழைக்காலம் தொடங்கயுள்ளதால் பெரிய கண்மாய்க்கு அதிக நீர் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வரும் பட்சத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படும். எனவே சுள்ளங்குடி கிராமத்திற்கு புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா? appeared first on Dinakaran.