ராமநாதபுரம், அக்.22: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று முதல் மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். முன்னதாக ராமநாதபுரம், முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட தாலுகா தலைமையிடங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகள் முன்பாக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர்களிடம் அபராத தொகையே இருமடங்கு வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் கட்டுபாடற்ற பொருட்களை அதிகமாக இறக்கி விற்பனை செய்ய குறியீடு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும். தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்களை சொந்த மாவட்டத்திலும், குறைந்தது 10 கி.மீ தூரத்திற்கு பணியாளர் குடும்பம் உள்ள ஒன்றியத்தில் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தினர்.
The post கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.