- காஞ்சிபுரம்
- குன்ரத்தூர்
- ஸ்ரீபெரும்புதூர்
- இந்து அறவழித் துறை
- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- இந்து சமய அறநெறிகள் துறை
- ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோவில்
- காஞ்சிபுரம் குமரகோட்டம்
- குன்ரதூர்
- இந்து மதம்
காஞ்சிபுரம்: தமிழ்நாடு முதலமைச்சரின் சட்டமன்ற அறிவிப்பு 2024-2025ன்படி ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கோயில்களில் இலவச திருமணம் நடத்தும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்தில் திருமண சீர்வரிசை பொருட்ககளை மணமக்களுக்கு கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் வழங்கி, மணமக்களை வாழ்த்தினர்.
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ், ஒன்றிய துணை சேர்மன் மாலதி போஸ்கோ, ஒன்றிய கவுன்சிலர் பரமசிவன் ஆகியோர் கலந்துகொண்டு, 2 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினர். இந்நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குன்றத்தூர்: குன்றத்தூர் முருகன் கோயிலிலும் ஒரே நாளில் 6 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நேற்று நடைபெற்றது. பின்னர், திருமணம் செய்து கொண்ட 6 ஜோடிகளுக்கும் தலா 4 கிராம் தங்கம், கட்டில், பீரோ மெத்தை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் என ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன், குன்றத்தூர் நகர் மன்ற தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு இலவச திருமணங்களை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், ஜெயக்குமார், சங்கீதா கார்த்திக், கோயில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* சீர்வரிசை பொருட்கள்
திருமணத்திற்காக, திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் – மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு, பூமாலை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜைப்பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் அடங்கிய ரூ.60 ஆயிரம் மதிப்பிலான திருமண சீர்வரிசை பொருட்கள் மணமக்களுக்கு வழங்கப்பட்டன.
The post காஞ்சிபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் கோயில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: இந்து அறநிலைய துறை சார்பில் நடந்தது appeared first on Dinakaran.