×
Saravana Stores

16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவஞானி சிலை வடிவமைப்பு: மாமல்லபுரம் சிற்பி அசத்தல்

மாமல்லபுரம்: அயர்லாந்து நாட்டில் கடந்த 16ம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த அந்நாட்டு பண்டைய கலாச்சார தத்துவ ஞானியும், பியோன் இசை கலைஞருமான ட்ரூயிட் என்பவரின் 8 அடி அகலம் மற்றும் 19 அடி உயர கொண்ட பைபர் சிலை, அந்நாட்டின் விக்டர்ஸ்வே சிற்ப பூங்காவில் நிறுவப்பட உள்ளது. இந்நிலையில், மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் உள்ள ஒரு சிற்ப கூடத்தில் ட்ரூயிட்டின் பைபர் சிலை செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டது.

இதில், வலது கையில் பிரமிடில் உள்ள கழுகுடன் அமைந்துள்ள கோலை பிடித்தும், இடது கையில் பாம்புகள் உள்ளது போலும், காலடியில் குள்ளநரி உள்ளது போன்று சிலை தத்ரூபமாக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, சிற்பக்கலைஞர் முருகன் என்பவர் 8 சிற்பக்கலைஞர்களுடன் ஒன்று சேர்ந்து கடந்த ஓராண்டாக வடிவமைத்து, முழுமையாக முடித்துள்ளார்.

முன்னதாக, முதலில் களிமண், பின்னர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் ஆகியவை மூலம் மாதிரி சிலை செய்யப்பட்டது. பின்னர், தனித்தனியாக செய்யப்பட்ட பாகங்களை ஒவ்வொன்றாக பொருத்தி 8 அடி அகலமும், 19 அடி உயரத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, விரைவில் அயர்லாந்து நாட்டிற்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது குறிப்பிட்டதக்கது.

The post 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவஞானி சிலை வடிவமைப்பு: மாமல்லபுரம் சிற்பி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Asatal ,Druid ,Ireland ,Sculptor ,Achatal ,
× RELATED மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர்...