×
Saravana Stores

தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை

தூத்துக்குடி, அக். 22: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (22ம் தேதி) காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 23ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா- மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை அடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி நகர்ப்புறத்தில் லேசான தூறல் விழுந்தது. அதேநேரத்தில் கோரம்பள்ளம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், புதுக்கோட்டை, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.நேற்று முன்தினம் காலை 6.30 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரை மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் 4 மில்லி மீட்டர் மழையும், கழுகுமலை 3, கயத்தார் 37, கடம்பூர் 41, எட்டயபுரம் 2, விளாத்திகுளம் 15, காடல்குடி 8, மணியாச்சி 74, கீழஅரசடி 30 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Tuticorin district ,Tuticorin ,Northeast Monsoon ,Middle East Bay of Bengal ,North Andaman Sea ,Dinakaran ,
× RELATED மதுரை மழை, பேரிடர் காலங்களில்...