×

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 500 பெண்களுக்கு சேலை

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு ஊராட்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 53ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய, நகரச் செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், கந்தசாமி, ராமஞ்சேரி மாதவன், சீனிவாசன் கண்டிகை ஏ.ரவி, சவுந்தர்ராஜன், சக்திவேல், ஒன்றிய நிர்வாகிகள் சிற்றம் சீனிவாசன், பூபாலன், கண்ணூர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர், பாசூரான், ஊராட்சி தலைவர் சித்தய்யா ஜெகதீசன், பாலாஜி, சங்கர் ஆகியோர் வரவேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான பா.வளர்மதி 500 பெண்களுக்கு சேலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.இ.சந்திரசேகர், த.கவிச்சந்திரன், ம.எழிலரசன், எஸ்.ஏ.நேசன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஞானகுமார், குமரேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பெலிக்ஸ் பாபு நன்றி கூறினார்.

The post திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் 500 பெண்களுக்கு சேலை appeared first on Dinakaran.

Tags : Sarees ,Tiruvallur West District AIADMK ,Tiruvallur ,53rd Annual Inauguration Ceremony and welfare programs ,Mapedu Panchayat ,Kadambathur ,Union ,District Secretary ,former minister ,PV Ramana ,Saree ,
× RELATED பெஞ்சல் புயல் மழையால்...