- UPI சேவை
- அறுவை சிகிச்சை
- மாலத்தீவு
- இந்தியன்
- வெளியுறவு அமைச்சர்
- ஜெய்ஷங்கர்
- இந்தியா
- யுபிஐ
- ஜனாதிபதி
- மொய்சு அதிரடி
- தின மலர்
மாலே: இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் மாதம் மாலத்தீவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார். அப்போது மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவையை அறிமுகம் செய்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து நாட்டில் யுபிஐ சேவையை அறிமுகம் செய்வதற்காக நேற்று முன்தினம் ஒரு கூட்டமைப்பை அதிபர் முய்சு உருவாக்கினார். மேலும் இதன் தலைமை நிறுவனமாக டிரேட்நெட் மாலத்தீவு கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யுபிஐ சேவையை அறிமுகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைளை அதிபர் எடுப்பதற்கு முடிவு செய்துள்ளார். இது மாலத்தீவு பொருளாதாரத்திற்கு நன்மைகளை கொண்டு வரும் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post மாலத்தீவில் யுபிஐ சேவை அதிபர் மொய்சு நடவடிக்கை appeared first on Dinakaran.