ஜகார்த்தா: இந்தோனேசியாவின் புதிய அதிபர் பிரபோவா சுபியாந்தோ ஆட்சியில் 109 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தோனேசியாவில் கடந்த பிப்ரவரியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பிரபோவா சுபியாந்தோ தேர்வு செய்யப்பட்டார். 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அவர் இந்தோனேசியாவின் 8வது அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து புதிய அரசின் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என புதிய அமைச்சரவையில் 109 பேர் பதவியேற்றனர். முந்தைய ஆட்சியில் வெறும் 34 அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். இந்தோனேசிய வரலாற்றில் 1965ல் முதல் அதிபர் சுகர்னோவின் அமைச்சரவையில் 132 பேர் இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக அதிக அமைச்சர்கள் கொண்டதாக சுபியாந்தோ அரசு உள்ளது.
The post இந்தோனேசியாவில் 109 அமைச்சர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.