இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம், 26வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக ஞாயிறு இரவு கூடியது. விவாதத்துக்கு பின் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு 224 வாக்குகள் தேவை. 225 எம்.பி.க்கள் ஆதரவாக வாக்களித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக கட்டுப்படுத்துதல் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளிட்ட திருத்தங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அவர் கையெழுத்திட்ட பிறகு இது சட்டமானது.
The post பாக். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை இனி நாடாளுமன்றம் நியமிக்கும் appeared first on Dinakaran.