×
Saravana Stores

எங்களிடம் திருடியதை திருப்பி தாருங்கள் மன்னர் சார்லசை நோக்கி முழக்கமிட்ட பெண் எம்பி: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு

கேன்பெர்ரா: இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் சிட்னியில் உள்ள தேவாலயத்திற்கு இருவரும் சென்றிருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று போர் நினைவிடத்திற்கு சென்ற மன்னர் சார்லஸ், ராணி கமிலா ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் நாடாளுமன்றத்திற்கு சென்ற சார்லஸ் எம்பிக்களிடையே உரையாற்றினார். இதன் பின்னர் சுயேட்சை எம்பி லிடியா தோர்பே, மன்னரை நோக்கி முழக்கமிட்டார்.‘‘எங்கள் மக்களுக்கு எதிராக இனபடுகொலை செய்தீர்கள். எங்களிடம் திருடியதை எங்களிடமே திருப்பி தாருங்கள். இது உங்களுடைய நிலம் இல்லை. நீங்கள் எங்களது மன்னரும் இல்லை” என்று சத்தமிட்டார். இதனை தொடர்ந்து எம்பி லிடியாவை பாதுகாவலர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.

The post எங்களிடம் திருடியதை திருப்பி தாருங்கள் மன்னர் சார்லசை நோக்கி முழக்கமிட்ட பெண் எம்பி: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Woman MP ,King Charles ,Australian ,Parliament ,Canberra ,England ,Queen Camilla ,Australia ,Sydney ,Australian Parliament ,
× RELATED ஆஸ்திரேலிய பெண் எம்பி எதிர்ப்பு; கடந்த...