×

ஐடிஎப் ஓபன் டென்னிஸ்: தனிஷா சாம்பியன்

பெங்களூரு: ஐடிஎப் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தனிஷா காஷ்யப் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அகான்க்‌ஷா நிட்யூர் உடன் மோதிய தனிஷா 6-7 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினாலும், பின்னர் அதிரடியாக விளையாடி 6-1, 6-1 என அடுத்த 2 செட்களையும் எளிதாகக் கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தினார். சர்வதேச டென்னிசில் தனிஷா வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது.

The post ஐடிஎப் ஓபன் டென்னிஸ்: தனிஷா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : ITF Open Tennis ,Tanisha ,Bengaluru ,Tanisha Kashyap ,ITF Open Tennis Series ,Akanksha Niture ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே கார் மோதி 2 தொழிலாளர்கள் பலி