×
Saravana Stores

ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி

பெங்களூரு: அகில இந்திய தலித் ஆக்‌ஷன் கமிட்டி தேசிய தலைவர் சி.நா.ராமு மற்றும் தேசிய மகளிரணி தலைவி சுசிலா தேவராஜ் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மக்களவை தேர்தல் சமயத்தில் ஷிவமொக்காவில் பிரசாரத்தில் ஈடுப்பட்ட ராகுல்காந்தி, ஹாசன் தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, 400க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவில் பதிவு செய்துள்ளார். இத்தகைய நபர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

அவரை ஆதரித்து பிரசாரம் செய்த பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பேசியிருந்தார். இப்படி பேசியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா பெஞ்ச் இரு தரப்பு வாதம் கேட்டபின், இது விசாரணைக்கு உகந்த மனுவாக ஏற்று கொள்ள முடியாது. விளம்பர நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம் என்று உத்தரவிட்டது.

The post ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்: கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Rahul ,Karnataka High Court ,Bengaluru ,All India Dalit Action Committee ,National ,President ,C.N. Ramu ,National Women's Congress ,Susila Devaraj ,Rahul Gandhi ,Shivamogga ,Lok Sabha elections ,Hassan ,Dinakaran ,
× RELATED கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு...