டெல்லி: விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஒருவாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு இமெயில், போன் அழைப்புகள் உட்பட பல்வேறு வழிகளில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. உள்நாட்டு சேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றன. இதனால், சில விமானங்கள் பாதி வழியிலேயே அவசரமாக தரையிறக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் 100 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்த அனைத்து மிரட்டல்களும் வெறும் புரளிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மிரட்டல் வந்த இ மெயில் முகவரி மற்றும் சமூக வலைதள முகவரியை வைத்து தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் உளவுத்துறை விசாரணை நடத்துகிறது.
The post விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை appeared first on Dinakaran.