- முரசொலி
- செல்வம்
- முதல் அமைச்சர்
- மு. கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- முரகோலி செம்மை
- கே. ஸ்டாலின்
- முரசொலி செல்வம்
- K.Veeramani
- மு. கே.
- முரகோலி செல்வத்தின் படப்பிடிப்பு விழ
- ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முரசொலி செல்வம் படத்திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.
முரசொலி செல்வம் மறைவால், எனது மனம் உடைந்து சுக்குநுறாகிவிட்டது. தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல் எதிரிகளுக்கு கூட நல்லதையே செய்து வந்தார் முரசொலி செல்வம். நான் பங்கேற்கும் திமுக தேர்தல் பரப்புரை கூட்டங்களை பார்த்துவிட்டு செல்வம் அறிவுரை கூறுவார். எங்களுக்கெல்லாம் மூத்த சகோதரனாக இருந்தவர் முரசொலி செல்வம். தி.மு.க இளைஞரணி உருவாகியபோது எனக்கு துணைநின்று ஊக்கப்படுத்தியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும்.
முரசொலி செல்வம் அறக்கட்டளை மூலம் திராவிட இயக்க படைப்புகள், படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். திமுக முப்பெரும் விழாவின்போது முரசொலி செல்வம் அறக்கட்டளை விருதுகள் வழங்கப்படும் என்று கூறினார்.
The post முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.