×
Saravana Stores

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு

பெங்களூரு: பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கடந்த‌ ஜூன் மாதத்தில் கைது செய்தனர். அவரது தந்தையும், முன்னாள் அமைச்சருமான எச்.டி. ரேவண்ணா மீதும் போலீஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். ரேவண்ணா ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், பிரஜ்வல் இன்னும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே பிரஜ்வல் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு ஆக. 24-ல் 2144 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.

பிரஜ்வல் தன்னை பலாத்காரம் செய்ததாக அவரது வீட்டு பணிப்பெண் கொடுத்த புகாரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து பல்வேறு புகார்கள் அடிப்படையில் பிரஜ்வல் மீது கர்நாடக போலீஸ் மேலும் 3 வழக்குகளை பதிவு செய்தது. இதனிடையே பாலியல் வழக்கில் ஜாமின் வழங்க கோரி பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

The post பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka High Court ,Prajwal Revanna ,Bangalore ,Karnataka ,Chief Minister ,Devakawuda ,Dinakaran ,
× RELATED பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு!