டெல்லி: தலைநகர் டெல்லியில் ரோகினி மாவட்டத்தில் உள்ள பிரசாந்த் விகார் பகுதியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே நேற்று காலை ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் கரும்புகை வெளியேறியது. யாருக்கும் எந்த சேதமும் ஏற்படாத நிலையில், டெல்லி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிஆர்பிஎப் பள்ளியின் சுற்றுசுவரில் குண்டு வெடித்தது:
வெடி குண்டானது பாலித்தின் பையில் சுற்றி, 1.5அடி ஆழ குழியில் பள்ளியின் சுற்றுசுவருக்கு அடியில் வைத்துள்ளனர். பின்னர் அந்த குழியை குப்பைகளால் மூடியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவு அந்த பகுதியில் வெள்ளை சட்டை அணிந்து அந்த பகுதியில் சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த குற்றசம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பரிமாறியுள்ளனரா என்ற என சைபர் கிரைம் போலீசார் தரவுகளை தேடிவருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க்கவில்லை என்பதால் அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பண்டிகை காலம் என்பதால் டெல்லியில் ஏற்கனவே உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post டெல்லியில் சிஆர்பிஎப் பள்ளி அருகே குண்டு வெடிப்பு சம்பவம்: முதற்கட்ட தகவல்கள் வெளியீடு..! appeared first on Dinakaran.