ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மருத்துவர் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தி நடந்து முடிந்தது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, முதல்வராக வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற கையோடு, மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மறுபுறும், தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.
கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் பகுதியில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு சுரங்கபாதையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது நேற்று மாலை தீவிரவாதிகள் சிலர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து நேற்று பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாகி, கை துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, மக்களைவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The post ஜம்மு-காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பலி appeared first on Dinakaran.