- மாவட்ட கூட்டுறவு துறை
- அமைச்சர்
- கோவி செழியன்
- தஞ்சாவூர்
- உயர்
- கோவி
- தஞ்சாவூர் மாவட்டம்
- சேஹ்யன்
- திருவிடைமருதூர் சாரதா மஹால்
- கூட்டுறவுத் துறை
- தின மலர்
தஞ்சாவூர், அக். 21: தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.61 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சாரதா மஹாலில் கூட்டுறவுத் துறை சார்பில் வங்கிக் கடனுதவி மற்றும் தாட்கோ மானியத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் கூட்டுறவுத்துறை சார்பில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.16 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் உத்தரவிற்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் வங்கி கடனுதவி மற்றும் தாட்கோ மானியம் வழங்கும் விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 340 கூட்டுறவு நிறுவனங்கள் (2 மத்திய கூட்டுறவு வங்கிகள், 243 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 6 நகர கூட்டுறவு வங்கிகள், 1 நகர கூட்டுறவு கடன் சங்கம், 53 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 8 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 5 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், 9 தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள், 1 கூட்டுறவு அச்சகம், 1 கூட்டுறவு ஒன்றியம் மற்றும் 8 மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள் செயல்பட்டு வருகின்றன.கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக் கடன், சுயஉதவிக் குழுக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், வீட்டுக்கடன், வீட்டு அடமானக் கடன், சிறு தொழில் கடன், டாம்கோ, டாப்செட்கோ கடன், கைம்பெண் கடன் மற்றும் தானிய ஈட்டுக் கடன் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 266 நபர்களுக்கு தாட்கோ கடன் ரூ.143.24 லட்சமும், 22 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 267 பயனாளிகளுக்கு ரூ.102 லட்சமும், 9 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி கடன் ரூ.7.38 லட்சம் மதிப்பிலும் பண்ணை சாரக் கடன் 18 பயனாளிகளுக்கு ரூ.9.09 லட்சம் என மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.261.71 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. இதுபோன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கியுள்ளார். இத்திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கோவி.செழியன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் முத்துக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜன், திருவிடைமருதூர் ஒன்றிய குழுத் தலைவர் சுபா திருநாவுக்கரசு, ஒன்றிய குழுத் துணைத் தலைவர் பத்மாவதி கிருஷ்ணராஜ், திருவிடைமருதூர் முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கருணாநிதி, திருவிடைமருதூர் பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர.ஜெயபால், திருப்பனந்தாள் ஒன்றிய குழுத் துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் இளவரசி சின்னசாமி, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
340 கூட்டுறவு நிறுவனங்கள் (2 மத்திய கூட்டுறவு வங்கிகள், 243 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 6 நகர கூட்டுறவு வங்கிகள், 1 நகர கூட்டுறவு கடன் சங்கம், 53 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள், 8 தொடக்க கூட்டுறவு வேளா ண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 5 வேளா ண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள், 9 தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள், 1 கூட்டுறவு அச்சகம், 1 கூட்டுறவு ஒன்றியம் மற்றும் 8 மாணவர் கூட்டுறவு பண்டகசாலைகள் செயல்பட்டு வருகின்றன.
The post மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 560 பயனாளிக்கு ₹2.61 கோடி கடனுதவி அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார் appeared first on Dinakaran.