×
Saravana Stores

தீபாவளி கூட்டம் அலைமோதியது

தஞ்சாவூர், அக்.21: தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி வருகிறது. இதையடுத்து புத்தாடைகள் வாங்க இப்போதே மக்கள் ஜவுளி கடைகளுக்கு படையெடுக்க துவங்கி விட்டனர். குறிப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தஞ்சாவூர் மாநகரில் துணி கடைகளில் மக்கள் கூட்டத்தால் தஞ்சாவூர் மாநகர் ஸ்தம்பித்தது. பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக ஜவுளி கடைகளுக்கு வந்து புத்தாடைகளை வாங்கி சென்றனர். துணிக்கடைகள், சாலையோர தரைக்கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. தஞ் சையை சுற்றியுள்ள 100க்கும் அதிகமான கிராமங்களுக்கு தஞ்சாவூர்யே பிரதான கடைவீதி என்பதால் மக்கள் தினமும் தஞ்சாவூர் நோக்கி வந்து செல்கின்றனர்.

தீபாவளி நெருங்க நெரு ங்க மக்கள் கூட்டம் அதிகளவில் வருவதால் தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், காந்திஜி ரோடு, தெற்குவீதி, கீழராஜ வீதி, கீழவாசல், புதிய பஸ் ஸ்டா ண்ட் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து ள்ளது.தஞ்சாவூர்யில் ஒரு சில துணி கடைகளை நம்பி இருந்த நிலை மாறி இப்போது புதிது, புதிதாக பல துணி கடைகள் திறந்திருந்தாலும் அனைத்து துணிக்கடைகளிலும் கூட்டம் ஆர்ப்பரித்து வருகிறது. தரைக்கடை வியாபாரிகள் விறு, விறுப்பாக வியாபாரம் செய்து வருகின்றனர். மக்கள் கூட்டத்தை போலீசார் ஒழுங்குப்படுத்தி வருவதுடன் அவ்வப்போது ஒலி பெருக்கி மூலம் ‘திருடர்களிடம் ஜாக்கிரதையாக’ இருப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கும் செல்வதால் அங்கும் கூட்டம் அலைமோதுகிறது.

The post தீபாவளி கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.

Tags : Diwali ,Thanjavur ,Thanjavur Municipality ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!