- புதுக்கோட்டை மாவட்டம்
- புதுக்கோட்டை
- மாநில பொதுச் செயலாளர்
- அகில இந்திய அமைதி ஒற்றுமை லீக்
- டாக்டர்
- ரவீந்திரநாத்
- தமிழ்நாடு அரசு
புதுக்கோட்டை. அக்.21: தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வண்ணம் பல்லுயிர் காடுகளை உருவாக்க வேண்டும் என்று அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரநாத் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தை விட அதிகமாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது. ஆனால் தற்போது இருப்பதாக தெரியவில்லை.
பேப்பர் தயாரிக்க கூடிய நிறுவனங்கள் லாபத்திற்காகவும் அரசியல் வாதிகளின் லாபத்திற்காகவும் அரசு அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் இலாபத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் தைல மர காடுகளை உருவாக்கியுள்ளனர். ஏற்கனவே இருந்த பல்லுயிர் பெருக்க காடுகளை அழித்துவிட்டு இந்த தைல மர காடுகளை உருவாக்கியுள்ளனர். இது மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடியதாக இல்லை.
பெரும்பாலும் பேப்பர் தயாரிப்பதற்காகவும் பெரிய நிறுவனங்களுக்கும் எரிபொருளாகவும் இந்த தைலம் மரங்களை பயன்படுத்துகிறது. தைல மரங்களால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதல பாதாலத்திற்கு சென்று கொண்டுள்ளது. மேலும் விவசாய பணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. விவசாய உற்பத்திகளையும் தடுக்கிறது. மேலும் பல்லுயிர் காடுகளில் வாழ்ந்த உயிரினங்களுக்கு எதிராக இந்த காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்லுயிர் காடுகளில் ஏராளமான விலங்குகள் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது. ஆனால் இன்று தைல மர காடுகளால் அந்த உயிரினங்கள் அழிந்து கொண்டு உள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974ம் ஆண்டு முதல் தைல மரங்கள் பயிரிடப்படுகிறது. இதனை அப்பொழுது இருந்தே மக்கள் எதிர்த்து வருகிறார்கள். ஆனால் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. தைல மரக் காடுகளை அப்புறப்படுத்த கோரி விவசாய அமைப்புகள் போராடி கொண்டு வருகின்றனர். அதே சமயம் ஒரு சில அமைப்புகள் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டு அறிக்கை தயார் செய்து கொண்டுள்ளனர். தமிழக அரசின் கொள்கை முடிவு எடுத்து தமிழகம் பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
சூழ்நிலையில் சுற்றுச்சூழலை பாது காக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக் காடுகளால் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் சராசரி மழை அளவு கூட தற்பொழுது பெய்யவில்லை. அப்படி பெய்யும் மழை கூட தைலம் மர காடுகளால் உறிஞ்சப்படுகிறது. மேலும் நீர் நிலைகளும் மழை நீரை சேகரிக்க முடியாத நிலையில் உள்ளது. எனவே நிலத்தடி நீரும் உயர வழியில்லை. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரக் காடுகளை அழித்துவிட்டு பல்லுயிர் பெருக்க காடுகளை உருவாக்க வேண்டும். தவறினால் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பாக பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க பல்லுயிர் காடுகளை உருவாக்க வேண்டும் appeared first on Dinakaran.