- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது ஒன்றிய மாநாடு
- தாபாப்பூர்.
- தாபாப்பூர்
- 9வது யூனியன் மாநாடு
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- தா.பாப்பூர், அரியலூர் மாவட்டம்
- மாவட்ட செயலாளர்
- இளங்கோவன்
- எஸ்.சிலம்பரசன்
- வி.லெட்சுமி
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது ஒன்றிய மாநாடு
- தின மலர்
தா.பழூர், அக். 21: அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 9வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டை மாவட்ட செயலாளர் இளங்கோவன் தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சிலம்பரசன், வி. லெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டுக் கொ டியை மூத்த நிர்வாகி தர்மலிங்கம் ஏற்றி வைத்தார். தீர்மானத்தை ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.சிலம்பரசன் முன்மொழிந்தார். முன்னதாக ஒன்றிய குழு உறுப்பினர் டி.செல்வராஜ் வரவேற்றார். மாநாட்டு துவக்க உரையை எம்.இளங்கோவன் தொடங்கி வைத்தார். மாநாட்டு அறிக்கையை தா.பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன் வைத்தார்.
சிபிஎம் கட்சி மாவட்ட செயற்குழு எம்.வெங்கடாசலம் மாநாட்டை வாழ்த்தி பேசினார். மாநாட்டில் புதிய ஒன்றிய குழு நிர்வாகிகளாக ஜெ.ராதாகிருஷ்ணன், கே.பன்னீர்செல்வம், எஸ்.உத்திராபதி, டி.செல்வராஜ், ஆர்.செந்தில்வேல், எஸ்.சிலம்பரசன், டி.ராமூர்த்தி, வி.லெட்சுமி, வி.குமார் உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா புதிய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
மாநாட்டில் வீட்டுமனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி ரூ.319 கூலியை குறைக்காமல் வழங்க வேண்டும், குருவாடி தலைப்பு தடுப்பணை கட்ட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி ரூபாய் 600 கூலி வழங்க வேண்டும்.தா பழூர் ஊராட்சியில் சுமார் 25 தொகுப்பு வீடுகள் கட்டாமல் பணத்தை கையாடல் செய்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர், விதவை ,மாற்றுத்திறனாளி ஆகிய தகுதி உள்ள நபர்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி நன்றி கூறினார்.
The post தா.பழூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9வது ஒன்றிய மாநாடு appeared first on Dinakaran.