×
Saravana Stores

நடப்பு சம்பா பருவத்திற்கு விவசாயிகள் நவ.15ம் தேதிக்குள்பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்

நாகப்பட்டினம், அக்.21: நடப்பு சம்பா பருவத்திற்கு நாகப்பட்டினம் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் வரும் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினம் வட்டாரத்தில் சம்பா பருவம் (நெல்-11) எதிர்பாராத இயற்கை – இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், விவசாயத்தில் நிலைப்பெற செய்ய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி, அதிகபரப்பில், பூச்சி நோய் தாக்குதல், நிலச்சரிவு மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் காப்பீட்டு தொகை வழங்கப்படும்,
வங்கியில் பயிர்கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

விவசாயிகள் முன்மொழி படிவத்துடன், அடங்கல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம், ஆதார் நகல், நில உரிமை பட்டா ஆவணங்களுடன் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது இ-சேவை மையங்கள் மூலமாக உரிய பிரிமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். நவம்பர் மாதம் 15ம் தேதி பயிர் காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகும். கேஷிமா பயிர் காப்பீடு நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. (நெல்-11) சம்பா பருவம் பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 541 செலுத்தி பதிவுசெய்த உடன் விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் நெல், சாகுபடி பரப்பு மற்றும் வங்கி கணக்கு விபரங்களை சரிபார்த்து காப்பீடு செய்த ரசீதை உடனே பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விரங்களுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நடப்பு சம்பா பருவத்திற்கு விவசாயிகள் நவ.15ம் தேதிக்குள்பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Samba ,Nagapattinam ,Assistant Director of Agriculture ,Dinakaran ,
× RELATED சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக்...