×
Saravana Stores

தூத்துக்குடி விசைப்படகுகள் இன்று வேலைநிறுத்தம்

தூத்துக்குடி,அக்.21: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் இன்று (21ம் தேதி) கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

இதனால் இன்று ஒருநாள் மட்டும் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் சாதாரண மீன்பிடி காலங்களிலும், மீன்பிடி தடை காலங்களிலும் மீன்பிடிக்க வருவதை தடுத்து நிறுத்த வேண்டும். சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 விசைப்படகுகளை சிறைபிடித்து வந்த தூத்துக்குடி மீன்பிடி துறைமுக 11 விசைப்படகுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவாக இன்று (21ம் தேதி) தூத்துக்குடி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். இதனால் இன்று (21ம் தேதி) ஒரு நாள் மட்டும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி விசைப்படகுகள் இன்று வேலைநிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை