ராஜபாளையம், அக்.21: ராஜபாளையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு 2027 போட்டிக்கான மாவட்ட அளவிலான தகுதி திறனாய்வுப் போட்டிகள் சிவகாசி சாட்சியார்புரம் சி.எஸ்.ஐ சிறப்பு பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 7 சிறப்புக் பள்ளியிலிருந்து 84 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் ராஜபாளையம் சிறப்பு பள்ளியில் இருந்து 100 மீட்டர் ஆண்கள் பிரிவில் முனியசாமி, பெண்கள் பிரிவில் கயல்விழி மற்றும் கௌரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மென்பந்து எறிதலில் குருநிதிஷ், நந்தகுமார் மற்றும் கைப்பந்து போட்டியில் ஆதித்யா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாநில அளவிலான தகுதி திறனாய்வு தேர்வு போட்டியில் பங்கேற்க உள்ளனர். தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர். விழாவில் ஆசிரியர் பிலோமினாள் வரவேற்புரையாற்றார். நிறைவில் பள்ளி ஆசிரியை அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
The post மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.