ராமநாதபுரம், அக்.21: ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு உரங்கள் இருப்பு குறித்து வேளாண்மை இணை இயக்குநர் நாகராஜன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பிறகு அவர், செய்தியாளர்களுக்கு கூறியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மற்றும் நடப்பு அக்டோபர் மாதத்தில் பெய்த மழையினைப் பயன்படுத்தி நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் 1,21,500 ஹெக்டேர் பரப்பில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போது சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களுக்கு தேவையான யூரியா 5607 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1,984 மெட்ரிக் டன், பொட்டாஷ் 120 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,060 மெட்ரிக் டன் என மொத்தம் 9,770 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.உரங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலமாகவும் விவசாயிகளுக்கு விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது.
உர விற்பனையாளர்கள், உரங்களின் இருப்பு விவரம் மற்றும் விலைப் பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும். விற்பனை செய்யும் போது விவசாயிகளிடம் ஆதார் அடையாள அட்டை பெற்று, விற்பனை ரசீது வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
The post விவசாய பணிகளுக்கு 9,770 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு: இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.