×
Saravana Stores

பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி

 

கமுதி,அக்.21: கமுதி அருகே காத்தனேந்தல் ஊராட்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் கிராமப்புற பெண்கள்,மகளிர் குழுக்கள் சுயதொழில் மேம்பாடு அடைய அப்பளம், ஊறுகாய், மசாலாப் பொடி தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், துணைத்தலைவர் பாலு, தலைமை வகித்தார்கள்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். பயிற்றுனர் மகாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார். பயிற்சியாளர் சிவகாமி கூறும்போது, கிராமப்புற பெண்கள் வாழ்க்கை தரம் உயர சுய தொழில் பயிற்சியை மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் மூர்த்தி, பசும்பொன் தேவர் கல்லூரியின் விடுதி காப்பாளர் பழனி, பகவதி அறக்கட்டளையின் தலைவர் வெள்ளைப் பாண்டியன், கலந்து கொண்டார்கள். பத்து நாட்கள் நடைபெறும் பயிற்சியில் தொழில் முறை, விற்பனை திறன், தொழில்கடன், தயாரிக்கும் முறைகள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படும் பயிற்சி முடித்தவுடன் சான்றிதழ் வழங்கப்படும் என்றனர்.

The post பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Indian Overseas Bank and Rural Self-Employment Training Institute ,Kathanendal Panchayat ,Municipal Council ,President ,Dinakaran ,
× RELATED பள்ளியில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை: மாணவர் படுகாயம்