ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டின் 8 வது அதிபராக முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியாந்தோ (73) நேற்று பதவியேற்றார்.உலகின் மிக பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியாந்தோ 58 % அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
8 மாதங்களுக்கு பிறகு அதிபர் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த விழாவில் நாட்டின் 8வது அதிபராக சுபியாந்தோ பதவியேற்றார். முன்னாள் அதிபர் விடோடோவின் மகன் ஜிப்ரான்( 37) துணை அதிபராக பொறுப்பேற்றுகொண்டார்.
பதவியேற்பு விழாவில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஆஸ்திரேலியத் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்ல்ஸ், தென்கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ, சீனத் துணை அதிபர் ஹான் ஜெங் உட்பட 30 நாடுகளின் தலைவர்கள்,உயர் அதிகாரிகள்,ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
The post இந்தோனேசியாவின் 8வது அதிபராக பிரபோவோ சுபியாந்தோ பதவியேற்பு appeared first on Dinakaran.