- ஓய்வூதியம் சங்கம்
- சென்னை
- தமிழ்நாடு தலைமைச் செயலக ஓய்வூதியர் சங்கம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- யூனியன்
சென்னை: அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தலைமைச்செயலக ஓய்வூதியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, எதிர்வரும் காலங்களில் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை உயர்த்தி அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பினை தொடர்ந்து, தற்போது 50 சதவீதமாக உள்ள அகவிலை படியை 2024 ஜூலை 1ம் தேதி முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாக 16 லட்சம் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரும் மனம் குளிரும்வண்ணம் அகவிலைப்படி உயர்வை முதல்வர் அறிவித்திருந்தார். இதனால் ஆண்டுக்கு ரூ.1931 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனினும், ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வருக்கு தமிழ்நாடு தலைமை செயலக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post அகவிலைப்படி உயர்வு முதல்வருக்கு ஓய்வூதியர்கள் சங்கம் நன்றி appeared first on Dinakaran.