×

‘சிவா மனசுல சக்தி’ 2ம் பாகமா? மீண்டும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா

சென்னை: தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகர் ஜித்தன் ரமேஷின் தம்பியுமான ஜீவா, தமிழில் ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் விரைவில் தயாரிக்கும் 100வது படத்தில் விஜய் நடிக்கிறார். இயக்குனர் முடிவாகவில்லை. இந்நிலையில் ஜீவா தனியாக படம் தயாரிக்க ஒரு நிறுவனம் தொடங்கியுள்ளார். அதற்கு ‘சூப்பர் குட் ஸ்டுடியோ’ என்று பெயரிட்டுள்ளார். இந்நிறுவனம் சார்பில் ஜீவா தயாரித்து நடிக்கும் படத்தை ராஜேஷ்.எம் இயக்குகிறார். கடந்த 2009ல் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் இணைந்து பணியாற்றிய அவர்கள், தற்போது மீண்டும் இணைகின்றனர்.

காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 30வது படத்தை ராஜேஷ்.எம் இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு ஜீவா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. இது ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் 2ம் பாகமாக இருக்காது என்று, இயக்குனர் ராஜேஷ்.எம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவரது இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் வெப்தொடரின் ஷூட்டிங்கை முடித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post ‘சிவா மனசுல சக்தி’ 2ம் பாகமா? மீண்டும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜீவா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jeeva ,Rajesh.M. ,CHENNAI ,RB Chaudhary ,Jitan Ramesh ,Vijay ,RB Chowdhury ,Rajesh.M ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சாதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கதை சீரன்