- மத்திய அமைச்சர்
- பெங்களூரு
- சட்டமன்ற உறுப்பினர்
- தயானந்த் பல்சிங் சவான்
- சுனிதாசவன்
- பெங்களூரு பசவேஸ்வராநகர்
- விஜயபுரம்
- மக்களவைத் தேர்தல்
- தின மலர்
பெங்களூரு: பெங்களூரு பசவேஷ்வரநகர் போலீஸ் நிலையத்தில் முன்னாள் மஜத எம்எல்ஏ தயானந்த் புல்சிங் சவானின் மனைவி சுனிதாசவான் என்பவர் கொடுத்துள்ள புகாரில்,’ எனது கணவர் தயானந்த் புல்சிங் சவானுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விஜயபுரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக சோமசேகர் நாயக் மூலம் அறிமுகமான ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் அண்ணன் கோபால்ஜோஷி, அவரது சகோதரி விஜயலட்சுமிஜோஷி மற்றும் அஜய்ஜோஷி ஆகியோர் ரூ.2 கோடி வாங்கி மோசடி செய்து விட்டனர்’ என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சோமசேகர் நாயக் மற்றும் விஜயலட்சுமி ஜோஷி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்த பசவேஷ்வர நகர் போலீசார், தலைமறைவாக இருந்த கோபால்ஜோஷி மற்றும் அஜய்ஜோஷி ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் நேற்று காலை மகாராஷ்டிரா மாநிலம் கொல்லாபுராவில் கோபால்ஜோஷியை கைது செய்தனர். அவரிடம் பண மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* சகோதரருடன் உறவு இல்லை சகோதரியும் கிடையாது
மோசடி புகார் குறித்து ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷி கூறும்போது, ‘எனக்கும் எனது சகோதரர் கோபால்ஜோஷிக்கும் இடையில் கடந்த 35 ஆண்டுகளாக எந்த உறவுமில்லை. நான் தனியாக வசிக்கிறேன். மேலும் எனக்கு சகோதரிகள் யாரும் கிடையாது. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் என்னை தொடர்புபடுத்தி பேசி வருகிறார்கள்’ என்றார்.
The post ரூ.2 கோடி மோசடி புகாரில் ஒன்றிய அமைச்சரின் சகோதரர் கைது appeared first on Dinakaran.