×
Saravana Stores

டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர தேசிய டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்த வேண்டும்: ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்

மாஸ்கோ: ரஷ்யாவின் கசான் நகரில் வருகிற 22, 23ம் தேதி 16வது பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த அதிபர் புடின், அமெரிக்க டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முதலீட்டு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் தேசிய டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்த வேண்டும். பொதுவான பிரிக்ஸ் நாணயத்திற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பானது டிஜிட்டல் நாணயத்தை பயன்படுத்துவதை ஆராய்ந்து வருகின்றது.

இதற்காக இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து ரஷ்யா செயல்பட்டு வருகின்றது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் தரத்தில் உள்ள வேறுபாடுகள் காரணமாக புதிய ரிசர்வ் நாணயத்தை உருவாக்குதில் எச்சரிக்கையான அணுகுமுறை அவசியமாகும். இந்த நாடுகள் தேசிய நாணயங்களின் பயன்பாடு, புதிய நிதி கருவிகள் (new financial instrument) உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

The post டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர தேசிய டிஜிட்டல் கரன்சிகளை பயன்படுத்த வேண்டும்: ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : President ,Putin ,Moscow ,16th BRICS Summit ,Kazan, Russia ,Narendra Modi ,BRICS ,US ,
× RELATED அமைதி வழியையே நாங்கள் விரும்பினோம்;...